வேட்டுவ மன்னன் "கண்டீரக் கோப் பெருநள்ளி"

























பாடியவர் : வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண். துறை: பரிசில்.

நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,
‘வரவுஎமர் மறந்தனர்; அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே


நளி மலை நாடன்! 

விவரங்கள்
பல ஆசிரியர்கள் ஆல் எழுதப்பட்டது
பாடியவர் : வன் பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு:தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும், இவன் வேட்டுவக் குடியினன் என்பதும்,

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்,
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்,
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை,
கான்அதர் மயங்கிய இளையர் வல்லே,
தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
நல்மரன் நளிய நறுந்தண் சாரல்,
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே,
“பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம்” என,
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்;
‘எந்நா டோ?’ என, நாடும் சொல்லான்!
‘யாரீ ரோ!’ எனப், பேரும் சொல்லான்;
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்,
நளிமலை நாடன் நள்ளிஅவன்’ எனவே.


புறநானூறு 148 கண்டீரக் கோப்பெரு நள்ளி:

அருவி கொட்டும் மலைநாட்டு அரன் நள்ளி. அவனைப் பாடுபவர்களுக்கு அவன் யானைகளைப் பரிசிலாகத் தருவானாம். வன்பரனர் அவனைப் பாடும்போது பரிசில் பெறுவதற்காக அவன் செய்யாத்தனவற்றைப் பொய்யாகக் பாடமாட்டாராம்.

புறநானூறு 149 கண்டீரக் கோப்பெரு நள்ளி:

நள்ளி வன்பரனரை அவரது குடும்பத்தோடு காப்பாற்றுவதால், அவரது குடும்பமே மாலையில் மருதப்பண் பாடுவதையும், காலையில் செவ்வழிப்பண் பாடுவதையும் மறந்துவிட்டதாம்.

புறநானூறு 150 கண்டீரக் கோப்பெரு நள்ளி:

தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படும் அரசன் நள்ளி. தோட்டி இப்போது தொட்டபெட்டா என்னும் பெயர் பூண்டு விளங்குகிறது. இவன் வல்வில் வேட்டுவன் என்று போற்றப்படுகிறான்.
நள்ளி தன்னை எப்படிப் பேணினான் என்பதை இப்பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். குளிரில் நடுங்கும் பருந்தின் சிறகு போல அவரது ஆடை கிழிந்திருந்ததாம். தன்னை அறியாமல் கால் போன வழியில் தனக்குத் தெரியாத வேறொரு நாட்டுக்கு அவர் வந்துவிட்டாராம். வழியில் ஒருவன் இவரது உடல் வருத்தத்தையும், உள்ள உலைவையும் கண்டானாம். அவன் மானை வேட்டையாடிக் குருதி படிந்த கழல் அணிந்திருந்தானாம். தலையில் திருமணி முடி அணிந்திருந்தானாம். அதனால் ஒரு செல்வத் தோன்றல் போல் காணப்பட்டானாம். அவனைப் பார்த்ததும் புலவர் அவனைத் தொழுது எழுந்தாராம். அவனோடு வந்த இளையர் வருவதற்கு முன் தன்னிடமிருந்த ஞெலிகோலில் தீ மூட்டி தான் வேட்டையாடிய மானைச் சுட்டுப் புலவரும் அவரது சுற்றத்தாரும் தின்னும்படி கொடுத்தானாம். அவர்கள் வயிறார உண்டு பசி நீங்கி, அருவி நீரைப் பருகிவிட்டுச் செல்லத் தொடங்கினார்களாம். உடனே அவன் தன் மார்பில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஆரத்தையும், கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றிப் புலவர்க்குக் கொடுத்தானாம். புலவர் அவனிடம், "நீர் யார்? எந்த நாட்டில் இருப்பவர்?" என்று வினவினாராம். அவன் எதுவுமே சொல்லாமல் போய்விட்டானாம். பின்னர் புலவர் அங்கே வந்த சிலரைக் கேட்டாராம். அவன் தோட்டி மலை மக்களைக் காப்பவனாம்."நளிமலை நாடன் நள்ளி"யாம்.
Category: 5 comments

5 comments:

SHAN said...

WOW very nice

SRINI said...

nice

Unknown said...

"கொடை, வீரம், பக்தி மிக்க வேட்டுவக்கோமானே" nam pugal ivulagam muludhai paravatum.......................

gobu said...

கொங்கர் வம்சம். கொற்றவை (காளி மற்றும் வடக்கு பார்த்து அமைந்திருக்கும் அம்மன் கோவிகள்) தேவி யை இன்று கொங்கு மண்டலமே கும்மிபிட காரணம் வேட்டுவர்களே. வேட்டுவர்களின் தாய் தான் காளி (காட்டை ஆள்பவள்). என்றுமே வேட்டுவர்களை காப்பாற்றுவாள். வேட்டுவர்கள் நல்லமுறையில் இருந்தால் மட்டுமே கொற்றவை சந்தோசமாக இருப்பாள். வேட்டுவர்களை அழிக்க நினைத்தால் அவ்வினம் அழியும். இதுவே தொல்காப்பியத்தின் நிலைபாடு.

குமார் வன்னியன் said...

nice news

Post a Comment