பெரிய புராணம்

வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும் கொல்லெறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசையன்றிச்
சில்லரித் துடியுங் கொம்புஞ் சிறுகணா குளியுங்கூடிக்
கல்லெனு மொலியின் மேலுங் கறங்கிசை யருவியெங்கும்.
வெல்லும் படையும், தறுகண்மையும், கூடிய சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் எங்கும் கொல், எறி, குத்து, என்றும் ஆரவாரித்துக் கூடுதலால் எழும் ஓசைகளேயல்லாமல் சிலவாய பரல்களையுடைய உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய ஆகுளியும் (சிறுபறையும்) சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக்குச் சத்தித்து ஓடும் அருவிகள் அங்கே எங்கும் உள்ளன. என்பது இதன் பொருளாகும். ஆகுளி, சிறுகணாகுளி எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே துடியினை விட ஆகுளி சிறிய முகமுள்ளன என அறியலாம். இக்கருவிகள் குறிஞ்சி நிலக்குறவர்களின் வேட்டையின்போதும் பாட்டுக்களிலும், குறிஞ்சி நிலத்திருவிழாக்களிலும் பயன்பட்டன.

கோடு முன்பொ லிக்க வுங்கு றுங்க ணாகு ளிக்குலம் மாடு சென்றி சைப்ப வும்ம ருங்கு பம்பை கொட்டவுஞ்
சேடு கொண்ட கைவி ளிச்சி றந்த வோசை செல்லவுங்
காடு கொண்டெ ழுந்த வேடு கைவ ளைந்து சென்றதே.
வேடர்கள் வேட்டையாடும் போது எல்லாப் பக்கங்களிலும், சுற்றிலும் முற்றுகையிட்டாற் போல் வளைந்து சூழ்ந்து. கொம்பு, ஆகுளி, பம்பை, கைவிளி என்றிவற்றின் ஓசைகளுடன் சூழ்ந்து சென்றனர் பெரிய ஓசைகளுடன் சூழ்தலால் முழை புதர் முதலிய மறைவிடங்களிற் பதுங்கியிருக்கும் விலங்குகள் பயந்துவெளிப்பட்டு ஓடும்போது அவற்றை வேட்டையாடுவர்; ஓடுவதனால் அடிச்சுவடுகண்டு அதற்குத் தக்கவாறு செய்வர். இது வேட்டையில் முற்ம்ற்செய்தொழில்களில் ஒன்று. இதனை விலங்கு எழுப்புதல் என்பர்.
Category: 0 comments

0 comments:

Post a Comment